குடியரசு தினவிழாவில் இரும்பாளி அரசுப் பள்ளிக்கு இடம் மற்றும் விளையாட்டு மைதானம் தானமாக வழங்கிய இரும்பாளியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்குணசேகரன் மற்றும்அண்ணாமலை ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு.
அன்னவாசல்,ஜன.27: குடியரசு தினவிழாவில் இரும்பாளி அரசுப் பள்ளிக்கு இடம் மற்றும் விளையாட்டு மைதானம் தானமாக வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன் மற்றும் அண்ணாமலை ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் இரும்பாளி அரசுப்பள்ளியில் குடியரசு தினம் , மாணாக்கருக்கான விளையாட்டு மைதானம் திறப்பு விழா, மற்றும் பள்ளி மாணவர்கள் , முன்னாள் மாணவர் மற்றும் பொதுமக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் என முப்பெரும் விழாநடைபெற்றது .
பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.எம்.ஆரோக்யசாமி வரவேற்றுப் பேசினார்.
இரும்பாளி ஊராட்சி மன்றத் தலைவர் சி.தீத்தாயி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சு.மணிகண்டன் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு ஆ.கோவிந்தராஜு, ஆசிரியர் பயிற்றுநர் செ. ரெத்தின சபாபதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி சார்ந்த அறிவுரை வழங்கி வாழ்த்திப் பேசினார்கள்.
முன்னதாக பள்ளிக்காக விளையாட்டு மைதானத்தை ஊராட்சி மன்றத் தலைவர் திறந்து வைத்து விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், இசைநாற்காலி, சட்டையில் பட்டன் மாட்டுதல், முறுக்குக் கடித்தல்,ஊசி நூல் கோர்த்தல்,பலூன் உடைத்தல் போட்டிகளும், முன்னாள் மாணவர்களுக்கான ஒரு மைல் ஓட்டமும், பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்காக லக்கி கார்னர் போட்டியும் சிறப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து மாணாக்கரின் ஆங்கில உரை, தமிழ் உரை, மற்றும் ராணுவவீரர்களை கவுரவப்படுத்தும் கவிதைகள் வாசிக்கப்பட்டது...
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பரிசுகள் வழங்கி கவுரப்படுத்தினர். அதன் பின் அனைத்து
விளையாட்டுப் போட்டிகளுக்குமான அனைத்து பரிசுகளையும் அனைத்து மாணாக்கருக்குமான அனைத்து எழுதுப் பொருள்களும் அடங்கிய கிப்ட் பாக்ஸ் அடங்கிய பரிசுகளையும் வழங்கிய கூத்தினிப்பட்டியைச் சார்ந்த
சி.ஜெயக்குமார் மற்றும் பள்ளிக்காக இடம் தானம் வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன் ,
விளையாட்டு மைதானம் வழங்கிய அண்ணாமலை குடும்பத்தார்கள் ஆகியோர் கவுரவிக்கப்பட்டார்கள் .முடிவில் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் தி.அருங்குளவன் நன்றியுரை நிகழ்த்தினார். இந்த முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் குழு மற்றும் கிராமக்கல்விக் குழுவைச் சார்ந்தோர், பள்ளி சத்துணவு அமைப்பாளர் , ஊழியர்முன்னாள் மாணாக்கர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.