Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, January 7, 2020

வருமானவரி தாக்கலில் புதுமுறை: சொத்தில் கூட்டு பங்கு இருந்தால் கவனம் தேவை

தனிநபர் வருமானவரி தாக்கல் தொடர்பாக ஏப்ரல் மாதத்தில் அறிவிக்க வேண்டிய அறிவிப்பை, ஜனவரியிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வீட்டு சொத்தில் கூட்டு பங்கு வைத்திருப்பவர்கள் புதிய முறைைய கடைபிடிக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தனிநபர்கள் தங்களின் வருமான வரியை செலுத்த வேண்டும் என்ற விதிமுறையில், 2020-21ம் ஆண்டிற்கான தனிநபர் வருமான வரி தாக்கல் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழைய நடைமுறைக்கு மாறாக, 2020-21 மதிப்பீட்டு ஆண்டிற்கான ஐடிஆர் -1 மற்றும் ஐடிஆர்-4 ஆகிய இரண்டு ஐடிஆர் படிவங்களை ஜனவரி முதல் வாரத்தில் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.




இதன்படி, வீட்டு சொத்தில் கூட்டு பங்கு இருக்கும் தனிநபர்கள் ஐடிஆர் - 1 அல்லது ஐடிஆர் - 4 படிவங்களை இணைக்க முடியாது. இதேபோன்று ரூ.1 கோடிக்கும் அதிகமாக வங்கி கணக்கில் இருப்பு வைத்திருப்போர் அல்லது வெளிநாட்டு பயண செலவு அல்லது மின் கட்டணம் ரூ.1 லட்சத்திற்கு அதிகமாக செலவிடுபவராக இருந்தால் அவர்களுக்கு ஐடிஆர் - 1 படிவம் பொருந்தாது. இந்த விதிகளின் கீழ் வருவோர் வேறு படிவங்களை பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும்.
ரூ.50 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு ஐடிஆர்- 1 படிவம் பொருந்தாது. ரூ.50 லட்சம் வரை வருமானம் உடைய தொழிலதிபர்கள் மற்றும் சம்பளதாரர்களுக்கு ஐடிஆர்-4 படிவம் மட்டுமே பொருந்தும்.



ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தனிநபர்களால் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான படிவங்களை வழக்கமாக அறிவிக்கும் வருமான வரித்துறை, ஜன. 3ம் தேதி 2020-21 மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி வருவாய் படிவங்களை அறிவித்துள்ளது (வருமானம் ஈட்டும் ஆண்டு ஏப்ரல் 1, 2019 முதல் மார்ச் 31, 2020 வரை).




இதுகுறித்து டாக்ஸ்மேனின் நவீன் வாத்வா கூறுகையில், ‘‘ரிட்டர்ன் ஃபைலிங் பயன்பாடு இல்லாமல் படிவங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, முந்தைய ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டிய வரி செலுத்துவோர், ஈ-ஃபைலிங் போர்ட்டலில் ரிட்டர்ன் ஃபைலிங் வசதி செயல்படுத்தப்படும் வரை அவ்வாறு செய்ய முடியாது” என்றார்.

Popular Feed

Recent Story

Featured News