மதுரை : மதுரையில் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சேதுபதி பள்ளியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் துவக்கி வைத்து பேசியதாவது: திட்டமிட்டு படித்தால் எந்த போட்டித் தேர்வுகளையும் எளிதில் எதிர்கொள்ளலாம்.
தினமும் ஒரு மதிப்பெண் வினாக்கள் 25ஐ இப்போது இருந்தே படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் 'நீட்' தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம். கடினமாக நினைக்கும் பகுதிகளை புரியும் வரை ஆசிரியர்களிடம் பலமுறை கேட்டு அறிய வேண்டும். நேர மேலாண்மை மிக அவசியம் என்றார். ஜூனியர் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில் நிர்வாகி அகத்தியன்பாரதி தலைமையில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பயிற்சி அளித்தனர்.டி.இ.ஓ., மீனாவதி, இந்திராணி, தலைமை ஆசிரியர்கள் ராஜசேகர்,தென்கரை முத்துப்பிள்ளை, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் ரகுபதி மற்றும் ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.