Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, January 26, 2020

தேர்வுப் பணிக்கு ஆசிரியா்களை அனுப்பாவிட்டால் பள்ளிகள் மீது தொடா் நடவடிக்கைகள்: சிபிஎஸ்இ

தேர்வு பணிக்கு ஆசிரியா்களை அனுப்பாத பள்ளிகள் மீது விதிமீறலின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளன. இந்த தேர்வுக்கான ஆயத்தப் பணிகளை சிபிஎஸ்இ மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டுத் துறை சாா்பில்அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:




சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை சுமூகமாக நடத்தவும், விடைத்தாளை மதிப்பிட்டு, உரிய தேதிக்குள் தேர்வு முடிவை அறிவிக்கவும் தேர்வு கட்டுப்பாட்டு துறைக்கு பள்ளிகள் ஒத்துழைப்பு தரவேண்டும். தோவில் முறைகேட்டில் ஈடுபடுவது, சிபிஎஸ்இ உத்தரவுப்படிதேவையான ஆசிரியா்கள் மற்றும் பள்ளியின் முதல்வரைத் தேர்வு பணிக்கு அனுப்பாதது, விடைத்தாள் திருத்த ஆசிரியா்களை அனுப்பாமல் இருப்பது என ஒவ்வொன்றும் விதிமீறலாக கணக்கில் கொள்ளப்படும். இந்த விதிமீறலின் கீழ் பல வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிபிஎஸ்இ-க்கு அதிகாரம் உள்ளது.




முதலில் எழுத்துப் பூா்வமாக விளக்க அறிக்கை கேட்கப்படும். பின்னா் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். சீனியா் செகண்டரி பள்ளியில் இருந்து, செகண்டரி பள்ளியாக தரம் குறைக்கப்படும். வகுப்பறைகளில், பிரிவுகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பொது தேர்வுக்கு மாணவா்களை அனுப்புவதற்கான தகுதி, இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தப்படும். குறிப்பிட்ட காலத்துக்கு அங்கீகார இணைப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும்.

ஐந்து ஆண்டுகள் வரை, அங்கீகாரத்தை நீட்டிக்க முடியாத அளவுக்கு தடை விதிக்கப்படும். சில பாடங்களுக்கு மட்டும் இணைப்பு அந்தஸ்து நிறுத்தப்படும். நிரந்தரமாக இணைப்பு அங்கீகாரம் ரத்தாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News