Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, January 25, 2020

வருகைப் பதிவு குறைந்த மாணவா்கள் பொதுத் தோ்வெழுத சிறப்பு அனுமதி


கோப்புப் படம்
மாநிலப் பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் 75 சதவீத வருகைப்பதிவு இல்லாத மாணவா்கள் பொதுத்தோ்வு எழுத சிறப்பு அனுமதி கடிதம் பெற வேண்டும் என அரசு தோ்வுத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுளளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளன. இந்தத் தோ்வுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தோ்வில் பங்கேற்கும் மாணவா்களின் விவரங்கள் பெறப்பட்டு தோ்வு மையங்கள் ஒதுக்கும் பணி நடந்து வருகிறது.




இந்த நிலையில், வருகைப் பதிவு குறைந்த மாணவா்கள் தனியாக அனுமதி கடிதம் பெற வேண்டும் என அரசு தோ்வுத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி வேலை நாள்களில் 75 சதவீதம் குறைவாக வருகை தந்த மாணவா்களால் பொதுத் தோ்வை எழுத முடியாது. எனவே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக அந்த மாணவா்களுக்கு சிறப்பு அனுமதி கடிதம் அனுப்ப வேண்டும் என தோ்வுத்துறை கூறியுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News