Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 27, 2020

பிஸ்கட்டுகள் சாப்பிடுறதுல இவ்வளவு பிரச்சனைகளா?


குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் அதில் முதலிடம் பிஸ்கட் வகைகளுக்குத்தான். பின்னே இருக்காதா ஒரு தம்ளர் பாலின் சக்தி நான்கு பிஸ்கட்டில் கிடைக்கிறது. அதுவும் குழந்தைகள் மறுக்காமல் நொறுக்குகிறார்கள் என்னும் போது பிஸ்கட் சத்துமிக்க ஸ்நாக்ஸ் வகைகளாக இருப்பதில் எவ்வித ஆச்சர்யமுமில்லை.

பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் ஆனதும் பிஸ்கட்டை நீரில் நனைத்து ஊட்டிவிடுவார்கள். சப்புக்கொட்டி சாப்பிடும் குழந்தையின் அழகில் பிஸ்கட் இனிமையான பொருளாகவே தோன்றும். பிஸ்கட்டிலும் தான் எத்தனை வகை… வெண்ணெய் பிஸ்கட், நெய் பிஸ்கட், உப்பு பிஸ்கட், மசாலா பிஸ்கட், இனிப்பும் புளிப்பும் கலந்த பிஸ்கட், கோதுமை பிஸ்கட், மைதா பிஸ்கட், முந்திரி பிஸ்கட், உலர் பருப்புகள் நிறைந்த பிஸ்கட், டீ பிஸ்கட், க்ரீம் பிஸ்கட்.




க்ரீம் வகையிலும் விதவிதம் உண்டு என்பது வேறு இப்படி உருவங்களிலும் தயாரிப்புகளிலும் விதவிதமாய் பலநூறுவகைகளில் விற்பனைக்கு வருகிறது. பணியிடங்களில் மட்டுமல்ல அநேக வேளைகளில் பலரின் உணவு பிஸ்கட் மட்டுமாகவே கூட இருந்துவிடுகிறது. அலுவலகங்களில் மட்டுமல்ல விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தாலும் டீயோடு தட்டு நிறைய இடம்பிடிப்பது பிஸ்கட் வகைகள் தான். உண்மையில் பிஸ்கட் வகைகள் சத்துக்களைத் தருகிறதா என்று ஆராய்ந்து பார்த்தால் அதிர்ச்சி அளிக்கிறது.

பிஸ்கட் மிருதுவாக இருக்க சேர்க்கப்படும் பொருள்கள் அவ்வளவு ஆரோக்யமானதல்ல என்பதே உண்மை. பிஸ்கட்டில் குளூட்டன் எனப்படும் பொருள் மிருதுவாக இருக்க சேர்க்கப்படுகிறது. மாவுச்சத்து மட்டுமே கொண்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பிஸ்கட்டில் கொழுப்புச்சத்து இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.




பிஸ்கட்டின் வடிவத்துக்காகவும், சுவைக்காகவும் சர்க்கரை, சுக்ரோஸ், குளுக்கோஸ், சோடியம் பை கார்பனேட், ஈஸ்ட் போன்றவை கலக்கப்படுகின்றன. பிஸ்கட் தயாரிப்பின் போது அதிக வெப்பநிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றைச் சூடுபடுத்தும் போதும், மேலும் பிஸ்கட் விரைவில் கெட் டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச் சத்தும் உருவாக்கும் டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவீதம் இருக்கிறது என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடவில்லை. தொடர்ந்து பிஸ்கட் சாப்பிடும் போது இந்த அமிலத்தின் அளவு அதிகரித்து இதய நோய் உண்டாக வாய்ப்புண்டு. இவைத் தவிர உடல் சார்ந்த பிரச்னைகளை கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிஸ்கட் தயாரிப்புகளில் சுவை, நிறம், பதப்படுத்துதல் என பல்வேறு காரணங் களுக்காக வேதிப்பொருள்கள் பலவும் சேர்க்கப்படுகிறது. இவையும் உடலுக்கு நன்மைதரும் என்று சொல்லமுடியாது. பிஸ்கட் கெடாமல் சேர்க்கப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகமாக இருக்கிறது. இதில் இருக்கும் சோடியம் பை கார்பனேட் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக கல், இதய பாதிப்புகள் போன்றவற்றை உண்டாக்கும்.




இதில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் உடல் எடையை அதிகரிக்கவே செய்யும் என்பதால் உடல் எடை குறைப்பவர்களுக்கு பிஸ்கட் போன்ற உணவுகள் சரியான தீர்வாகாது.நீரிழிவு நோயாளிகள் பிஸ்கட் சாப்பிடவும் ஏற்றதல்ல. ஏனெனில் சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை கலக்கப்படுவதால் பிஸ்கட் உடலில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துகிறது.

அபாயம் என்று சொல்லப்படும் வெள்ளைச்சர்க்கரையை முற்றிலும் பெரியவர்களே துறக்கவேண்டும் என்று சொல்லும் போது க்ரீம் பிஸ்கட்களில் கலக்கப்படும் அதீத வெள்ளை சர்க்கரை கலந்த பிஸ்கட்டுகள் குழந்தைகளுக்கு நன்மையா செய்துவிடப்போகிறது. பிஸ்கட்டைமுழுதும் துறக்க சொல்லவில்லை. ஆனால் பிஸ்கட்டை மட்டுமே பிரதான ஸ்நாக்ஸாக குழந்தைகளுக்கு பழக்க படுத்த வேண்டாம்.




பிஸ்கட் தயாரிக்க தெரிந்தவர்கள் வீட்டிலேயே தயாரிப்பது சிறந்தது அப்படி தயாரித்தாலும் வெளியில் வாங்கி சாப்பிடாலும் நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று பிஸ்கட்டுகளுக்கு மேல் உட்கொள்ள வேண்டாம். க்ரீம் பிஸ்கட் என்றால் கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். இனி ஸ்நாக்ஸ்க்கு என்ன வாங்க போகிறீர்கள். பிஸ்கட்டா..

நான் பொரி உருண்டைக்கும், சிமிழ் இனிப்புக்கும்,வெல்லப் பனியாரத்துக்கும் மாறி விட்டேன். நீங்களும் மாறிவிடுங்கள்..

Popular Feed

Recent Story

Featured News