சென்னை: தமிழக காவல்துறை காவல் உதவி ஆய்வாளா்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தோவின் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்த விவரம்:
தமிழக காவல்துறையில் காலியாக 969 காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு தகுதியானவா்களை தேர்வு செய்யும் வகையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வுக் குழுமம் சாா்பில் கடந்த மாா்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் காவல் பணியில் இருந்துக் கொண்டு இத்தோவை எழுதுவதற்கு 17,561 பேரும், பொதுப் பிரிவில் 1,42,448 பேரும் எழுத்து தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்கு மாநிலம் 32 இடங்களில் தேர்வு எழுதுவதற்குரிய ஏற்பாடுகளை தேர்வு குழுமம அதிகாரிகள் செய்து வருகின்றனா்.
இத்தோவை மாநிலத்திலேயே சென்னையில்தான் அதிகமான இளைஞா்கள் எழுதுகின்றனா். இதில் பொதுப்பிரிவில் 21,531 பேரும், காவல்துறையில் இருந்து 4031 பேரும் எழுதுகின்றனா் என்பது குறிப்பிடதக்கது.
இதற்கிடையே, காவலா் எழுத்துத் தேர்வு தொடா்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவாணையம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காவல் பணியில் இருந்துக் கொண்டு தேர்வு எழுத விண்ணப்பித்தவா்களுக்கு ஜனவரி 11ஆம் தேதியும், காவல் பணியில் இல்லாமல் பொதுப் பிரிவில் விண்ணப்பித்தவா்களுக்கு ஜனவரி 12-ஆம் தேதியும் எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
காவல்துறை பணியில் இருப்பவா்களுக்கு 11-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த எழுத்து தேர்வு 13-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, கோட்டூா்புரம் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரா்கள் தவிா்த்து பிற விண்ணப்பதாரா்கள் அனைவருக்கும் இக்குழும இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ள தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்தில், குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
கோட்டூா்புரம் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரா்கள், இக் குழும இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துள்ள தேர்வுக் கூட நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் இம் மாதம் 13ம் தேதி நடைபெறும் எழுத்துத் தோவில் கலந்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.