சென்னைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம், 30 பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட மேலும் விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.Madras University Faculty Recruitment 2020
Madras University காலிப் பணியிட விபரங்கள்:
சென்னைப் பல்கலைக் கழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி உதவிப்பேராசிரியர் பணிக்கு மொத்தம் 8 காலியிடங்கள் உள்ளது. இவற்றில், மானுடவியல் துறையில் 1, இந்திய வரலாறு துறையில் 1, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய படிப்புகள் துறையில் 1, கனிம வேதியியல் துறையில் 1, அப்ளைடு ஜியோலாஜி - 1 என ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Madras University Faculty Recruitment 2020
இணைப் பேராசிரியர் விபரம்
இணைப் பேராசிரியர் பணிகளுக்கு இந்திய இசைத் துறையில் 1, உளவியல் துறையில் 1, பொருளாதாரத் துறையில் 1, தத்துவவியல் துறையில் 1, அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையில் 1, ரியாஸ் கணிதத் துறையில் 1, புள்ளியியல் துறையில் 1, தாவரவியலில் CAS துறையில் 2, உயிரி வேதியியல் 1, கிரிஸ்டலோகிராபி மற்றும் உயிரியற்பியல் 2, பிசிக்கல் வேதியியல், ஆர்கனிக் கெமிஸ்டரி, இன்ஆர்கானிக் கெமிஸ்டரி, ஜியோகிராபி, மருந்தியல் மற்றும் சுற்றுச்சூழல் நச்சியல், Genetics உள்ளிட்ட துறையில் தலா 1 என்ற வீதத்தில் மொத்தம் 20 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Madras University Faculty Recruitment 2020
பேராசிரியர் பணியிட விபரங்கள்:
பண்டைய வரலாறு மற்றும் தொல்பொருளியல் -1, தத்துவவியல் - 1, RIAS கணிதம் - 1, புள்ளியியல் - 1, மருந்தியல் மற்றும் சுற்றுச்சூழல் நச்சியல் - 1, உட்சுரப்பியல் - 1 ஆகும்.
Madras University Faculty Recruitment 2020
ஊதியம்
மேற்குறிப்பிட்டுள்ள துறை பேராசிரியர் பணிகளுக்கு ரூ.1.44 லட்சம் முதல் ரூ.2.18 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இணை பேராசிரியர் பணிக்கு ரூ.1.31 லட்சம் முதல் ரூ.2.17 லட்சம் வரையிலும் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கு ரூ.58,000 முதல் ரூ.1.82 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Madras University Faculty Recruitment 2020
முக்கிய இணையதள முகவரிகள்
சென்னை பல்கலை பணிக்கான இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்.
Madras University பணியிடத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
Madras University Faculty Recruitment 2020
Madras University Faculty Recruitment விபரங்களுக்கு
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சென்னைப் பல்லைக்கழக பேராசிரியர், உதவிப்பேராசியர் மற்றும் இணைப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.unom.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை ஜனவரி 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.