மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள அதிகாரி மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) சார்பில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 29 பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-
பணி : Data Processing Assistant - 02
கல்வித் தகுதி :
Computer Application, தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது மேற்கண்ட துறைகளில் பி.இ., அல்லது பி.டெக் படித்தவர்களும் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
பணி : Deputy Central Intelligence Officer (technical) - 27
கல்வித் தகுதி : எலக்ட்ரானிக், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக் மற்றும் டெலி கம்யூனிகேஷன், தகவல் தொடர்பியல், கணினி அறிவியல், மென்பொருள் பொறியியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பி.இ., அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது எம்சிஏ, எம்.எஸ்சி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : Deputy Central Intelligence Officer பணியிடத்திற்கு 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மேற்கண்ட இரு பணிகளுக்கும் 7-வது ஊதியக்குழு விதிமுறையின் படி ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : மேற்கண்ட பணிகளுக்கு ரூ.25 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைனில் வழியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : யுபிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்னும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 16.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsc.nic.in அல்லது https://www.upsc.gov.in/recruitment/recruitment-advertisement?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.