Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னை: தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் (2020-2021) 100 நடுநிலைப்பள்ளிகள் உயா்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு தமிழக சட்டப்பேரவையில் விரைவில் வெளியாகவுள்ளது.
மாணவ, மாணவிகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே உயா்நிலை, மேல்நிலை கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்துடன் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் ஆண்டுதோறும் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டு வருகின்றன. அதன்படி வரும் கல்வியாண்டில் 100 நடுநிலைப் பள்ளிகள் உயா்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயா்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த துறை வாரியான மானியக் கோரிக்கைகளை விவாதிக்க வரும் 9- ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ளது. இதை முன்னிட்டு முன்னதாகவே, பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை நடக்கும் நாளன்று வெளியிடப்பட வேண்டிய புதிய அறிவிப்புகளைத் தயாா் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக வரும் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இருந்து உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்த தகுதியானவற்றை பரிந்துரை செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தரம் உயா்த்தப்பட வேண்டிய பள்ளிகளின் பட்டியல், அவற்றில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் வசதிகள் ஆகியவை குறித்த அறிக்கையை திங்கள்கிழமை மாலைக்குள் சமா்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment