Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 1, 2020

உங்க கையில் இந்த அபூர்வ ரேகைகளில் ஏதாவது ஒன்று இருக்கா? அப்போ நீங்கள் பேரதிர்ஷ்சாலியாம்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

நமது வாழ்க்கையில் எவ்வளவு அதிர்ஷ்டம் இருக்கிறது என்பதை நமது கையில் ரேகையை வைத்தே கண்டறிந்து விடலாம் என கூறப்படுகின்றது.சரியான ரேகை சரியான இடத்தில் இருப்பது அவர்களை அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.அந்தவகையில் அந்த அதிர்ஷ்டம் யார் யாருக்கு இருக்கும் என இங்கு பார்ப்போம்.



மணிக்கட்டு ரேகையில் இருந்து விதி ரேகை:உங்கள் விதி ரேகை மணிக்கட்டிலிருந்து தொடங்கி எந்த தடங்களும் இல்லாமல் சனி மேடு வரை சென்றால் அது மிகவும் அதிர்ஷ்ட ரேகையாகும். இந்த ரேகைகள் இருப்பவர்கள் தொடர்ந்து வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றுகொண்டே இருப்பார்கள், இவர்கள் வாழ்க்கையில் பணக்கவலை என்பது முற்றிலும் இருக்காது.அதேசமயம் ராகு மேடு ஏற்றமாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் மிக உயரிய நிலையை குறுகிய காலக்கட்டத்தில் அடைந்து விடுவார்கள்.ராகு ஒரு வலிமை வாய்ந்த கிரகமாகும், திடீர் ஏற்றம், செல்வம், மனஉறுதி, எதிரிகளை நண்பராக்குதல் என பல நன்மைகள் இதனால் வந்து சேரும்.



சனி மேட்டில் இருந்து குரு மேட்டிற்கு ரேகை:சனி மேட்டில் இருந்து அல்லது ஆள்காட்டி விரலில் இருந்து ரேகை தொடங்கி குரு மேட்டை நோக்கி வளைவான ரேகை சென்றால் அவர்களுக்கு பரம்பரை சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் அவர்களின் மனைவி வழியாகவும் அவர்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் கிடைக்கும்.இவர்கள் வாழ்க்கையில் திடீர் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது, லாட்டரியில் பணம் விழுவது அல்லது சூதாட்டத்தில் பணம் ஜெயிப்பது என இவர்களுக்கு திடீரென அதிர்ஷ்டம் வரும்.
இரண்டு விதி ரேகை:இரண்டு விதி ரேகைகள் இணையாக இருப்பது அல்லது ஒரே நீளத்தில் மற்றும் ஒரே வண்ணத்தில் இரண்டு விதி ரேகைகள் இருக்கும்போது அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருந்து வருமானத்தை பெறுவார்கள்.இவர்கள் செய்யும் அனைத்து தொழிலும் இவர்களுக்கு வெற்றிகரமானதாக இருக்கும். இது அதிர்ஷ்டம், வளம் மற்றும் வெற்றியின் அடையாளம் ஆகும்.



மோதிர விரலில் செங்குத்துக் கோடு:மோதிர விரலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் செங்குத்துக் கோடு இருப்பவர்களுக்கு சக்திவாய்ந்தவர்களிடம் இருந்தும், பிரபலமானவர்களிடம் இருந்தும் உதவிகள் குறைவில்லாமல் கிடைக்கும்.இவர்களின் தொடர்ச்சியான உதவியின் மூலம் இந்த ரேகை இருப்பவர்கள் விரைவில் செல்வந்தராக வாய்ப்புள்ளது.தலைமை ரேகை மற்றும் சூரிய ரேகை முக்கோணம் தலைமை ரேகையில் இருந்து ஒரு கோடு சென்று சூரிய ரேகையுடன் இணைந்து ஒரு முக்கோணத்தை உருவாக்கினால் அவர்கள் அதிபுத்திசாலிகளாகவும், மிகசிறந்த தொலைநோக்கு பார்வை உடையவர்களாக இருப்பார்கள்.தங்களின் புத்திசாலித்தனத்தின் மூலம் இவர்கள் பெரும்புகழையும், செல்வத்தையும் அடைவார்கள்.



தடையில்லாத சூரிய ரேகை மற்றும் விதி ரேகை:ஒருவரின் கையில் சூரிய ரேகையும், விதி ரேகையும் கையின் அடிமட்டத்தில் இருந்து தொடங்கி எந்தவித தடையும் இல்லாமல் மேல்நோக்கி செல்வது கைரேகையில் இருக்கும் மிகசிறந்த அதிர்ஷ்டமான ரேகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.இவர்கள் பிரபலமாகவும், செல்வந்தராகவும் இருக்கவே பிறந்தவர்கள்.வாய்ப்புகள் இவர்கள் வாசலை தேடி வரும். சூரிய ரேகை ஒருவரின் கையின் அடிமட்டத்தில் இருந்து தொடங்கி மோல்நோக்கி எந்த தடையும் இல்லாமல் செல்வது அவர்களின் வாழ்க்கையில் எந்த தடையும் இல்லாமல் முன்னேற்றங்கள் அமையும் என்பதன் அர்த்தமாகும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News