Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 14, 2020

இரவு விடுமுறை... இப்போது இல்லை.. ஏன் இந்த மாற்றம் ? பெற்றோர்கள் குழப்பம்.. !!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups




கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுள்ளது.
கொரோனா வைரசால் இந்தியாவைப் பொருத்த வரைக்கும் 70க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு என்பது உறுதியாகி இருக்கிறது. இரண்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் தொடக்க வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றைய பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நேற்று இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் அனைத்து மாவட்டங்களில் இருக்கக்கூடிய தொடக்க வகுப்புகளான ப்ரீகேஜி , எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மார்ச் 16 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.




அதோடு கேரள எல்லையை ஒட்டி இருக்கக் கூடிய தென்காசி , தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கு ப்ரிகேஜி , எல்கேஜி , யுகேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சுற்றைக்கை பள்ளிக்கல்வி ஆணையர் தரப்பில் வழங்கப்பட்டிருக்கிறது. அதில், விடுமுறை குறித்து மறு அறிவிப்பு வரும்வரை இந்த தகவலை யாரும் தெரிவிக்க வேண்டாம் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது.



அதன் அடிப்படையில் தற்போதைக்கு இந்த விடுமுறை அறிவிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் விடுமுறை அறிவிப்பு குறித்து கூடுதலாக தமிழக அரசின் சுகாதாரத்துறையுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டி இருப்பதனால் இந்த அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். மேலும் திங்களன்று என்ன முடிவு என்பதை முழுமையாக அறிவிக்கும் என்றும் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.




இரண்டு நாட்களுக்கு முன்பாக உயர்நீதிமன்றத்தில் கொரோனா முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை வைத்து ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கின் போது விடுமுறை அளிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்க இயலாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில்தான் நேற்றிரவு பள்ளிக்கல்வி ஆணையர் அதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
ஆனால் தற்போது மேலும் ஆலோசிக்க வேண்டியுள்ளதால் இந்த அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இதன் மூலமாக விடுமுறை ரத்து என எடுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் ரத்து என்று தெரிவிக்கவில்லை. தற்போதைக்கு அறிவிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் ஒரு அறிவிப்பு வரும் என்று ஏதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News