Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக மீன்வளத்துறையின் அசூர் மீன் பண்ணையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மீன்வளத்துறையில் அசூர் மீன் பண்ணையில் இரண்டு மீன்வள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
மீன்வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டும், ஆதிதிராவிடர், அருந்ததியினர் பிரிவினர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடத்திற்குத் தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், நீச்சல், வலை பின்னுதல், அறுந்த வலைகளைச் சரி செய்தல், வலை வீச தெரிந்திருக்க வேண்டும். மீனவர் பயிற்சி சான்றிதழ் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://tiruchirappalli.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று பூர்த்தி செய்து வரும் ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
மீன்வளத்துறை இயக்குநர் (மண்டலம்),
திருச்சி 17/2, சமது பள்ளித்தெரு, காஜா நகர்,
திருச்சி - 620020.
No comments:
Post a Comment