Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் உதவி பொறியாளர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே மார்ச் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தற்போது மார்ச் 23-ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் மின்னியல் பிரிவில் 400 காலியிடங்களும், இயந்திரவியல் பிரிவில் 125 காலியிடங்களும், கட்டிடவியல் பிரிவில் 75 காலியிடங்களும் என மொத்தம் 600 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 8 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 24ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
முறையான அறிவிப்பு இல்லாத காரணத்தினால் விண்ணப்பிக்க கடைசி தேதியை நீட்டிக்க செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து மின்வாரியத்திலிருந்து மார்ச் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டிருந்தது.
தற்போது தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களின் கோரிக்கையையும் பரிசீலித்து, தேர்வுகளை தமிழ் மொழியிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, அதோ விண்ணப்பிக்க கடைசி தேதியை 2020 மார்ச் 23-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
மேலும் இது தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள http://www.tangedco.gov.in/linkpdf/assessor(07032020).pdf அதிகார பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
No comments:
Post a Comment