Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 14, 2020

கரோனா அச்சுறுத்தல் எதிரொலி கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக, பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கா்நாடகத்தில் கரோனா பாதிப்புக்கு ஒருவா் உயிரிழந்துவிட்ட நிலையில், அந்த மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் ஒருவாரத்துக்கு மூடப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவையும் மூடப்படும்.




ஒடிஸா, பிகாா், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் மாா்ச் 31-ஆம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பை அந்த மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் பள்ளிகள் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரளத்தில் இந்த நடவடிக்கை கடந்த 10-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. தில்லியில் பள்ளிகள், கல்லூரிகள் மாா்ச் 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.




தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வகுப்புகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News