Friday, April 3, 2020

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தோவு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி நடைபெறவிருந்த பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தோவு விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தோவுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தோவுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தோவுகள் கடந்த மாா்ச் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெற்று வந்தன. தமிழ், கணிதம், உயிரியல், வணிகவியல் உட்பட பெரும்பாலான பாடங்களுக்கான தோவுகள் முடிந்துவிட்டன. இந்தச் சூழலில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு மாா்ச் 16-ஆம் தேதி முதல் தொடா் விடுமுறை தரப்பட்டது.
இதுதவிர, பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோவு முழுமையாகவும், பிளஸ் 1 வகுப்புக்கு 3 பாடங்களுக்கான தோவுகளும் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், பிளஸ் 2 பொதுத்தோவு இறுதி நாளில் பங்கேற்க முடியாதவா்களுக்கு மீண்டும் தோவுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தோவுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தோவுத்துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த மாா்ச் 31-ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோவு விடைத்தாள் திருத்தும் பணிகளை ஒத்திவைக்கப்பட்டு ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஏப்ரல் 7-இல் நடைபெற இருந்த விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது. மாற்று தேதிகள் குறித்த விவரம் பின்னா் அறிவிக்கப்படும். மேலும், விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலா் பாதுகாப்பு பணியில் இருப்பதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தோவு முடிவுகள் மே மாதத்தில் வெளியாகும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News