Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 4, 2020

நாளை ரேஷன் கடைகள் செயல்படாது – அப்போ 1000 ரூபாய் எப்படி கிடைக்கும்..? தமிழக அரசின் அறிவிப்பு..!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அரசாங்கம். இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே அரசாங்கம் ரேஷன் கார்ட்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. மேலும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது என அறிவித்துள்ளது.
டோர் டெலிவரி:
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மக்கள் பீதியில் உள்ளதால் அரசு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் சமூக விலகலை மேற்கொள்ளும்படி இந்தியா அரசு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்த்து வருகின்றனர்.
நாளை ரேஷன் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் நாளை அரிசி அட்டைக்காரர்களுக்கு வீட்டில் சென்று 1000 ரூபாய் மற்றும் இலவச பொருட்களுக்கான டோக்கன் தரப்பட உள்ளது. எனவே கடைகள் இயங்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News