Thursday, April 23, 2020

தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அனுமதி: அரசாணை வெளியீடு


தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிப்படப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கில் இருந்து சில பணிகளுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அனுமதி வழங்ப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பணியில் ஈடுபடுவோர் தனி மனித இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது.
மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற அனுமதி. நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு மற்றும் கட்டுமானம், சாலைகள், மேம்பாலங்கள், நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம், செங்கல் சூளை பணிகள், மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணிகள், மின்சாரப் பணிகள் உள்ளிட்டவை இயங்கலாம். மேற்குறிப்பிட்ட பணிகளின்போது கரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News