Wednesday, April 29, 2020

கரோனா வைரஸில் மொத்தம் 10 வகை. கடும் பாதிப்பை ஏற்படுத்துவது இந்த வகை தான்.! - ஆய்வில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

கரோனா வைரஸில் மொத்தம் 10 வகை இருப்பதாகவும் அதில் ஒரு வகை மட்டுமே உலக அளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கல்யாணி என்ற பகுதியில் உள்ள தேசிய மரபணுக்கள் மருத்துவ நிறுவனத்தை சேர்ந்த நிதான் பிஸ்வாஸ் மற்றும் பார்த்தா மஜும்தர் என்ற இரண்டு பேர் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வு முடிவுகள் விரைவில் இந்திய மருத்துவ கவுன்சிலால் வெளியிடப்பட உள்ளது.
அவர்கள் நடத்திய ஆய்வில், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ்,தற்போது ஓ, ஏ2, ஏ2ஏ, ஏ3, பி1, பி என 10 வகைகளாக பிரிந்துள்ளது எனவும், அதில், A2A என்ற வகைதான் உலக அளவில் மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், ஏ2ஏ வகை, மனிதனின் நுரையீரலுக்குள் மிகவும் எளிதாக நுழையும் தன்மை கொண்டது. இதனால்தான் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைகின்றனர் என கூறுகின்றனர்.
இவர்களது ஆய்விற்கு இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் RNAக்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் அதில், A2A வகை கரோனா வைரஸ்தான் 47.5% இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களது இந்த ஆய்வு கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News