Tuesday, April 28, 2020

10ஆம் வகுப்புக்கு முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வா?


பத்தாம் வகுப்புக்கு, மொழி பாடங்கள் இல்லாமல், முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., என்ற மத்திய பாடத்திட்டத்தில், 10ஆம் வகுப்புக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டன. ஆனால் தமிழகத்தில் நடத்தாவிட்டால், மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பும், வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும். எனவே, தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 10ஆம் வகுப்பு கட்டாயம் நடத்தப்படும் என்றும், அது குறித்த அறிவிப்பு மே 3க்கு பிறகு வெளியாகும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்நிலையில் மொழி பாடங்களை விட்டு விட்டு, முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா , கேள்விகளை குறைத்தோ, பாடங்களை குறைத்தோ நடத்தலாமா என்றும் பள்லிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News