Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, April 6, 2020

காரில் இருந்தபடியே 10 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் முறை : நாட்டிலேயே முதன்முறையாக டெல்லியில் அறிமுகம்

நாட்டிலேயே முதன்முறையாக 10 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் முறை டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகளை பின்பற்றி மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற டாக்டர் டாங்கஸ் என்ற தனியார் ஆய்வகம் இந்த புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. மருத்துவரின் பரிந்துரையுடன் யார் வேண்டுமானாலும் இங்கு கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளலாம். ஒவ்வொரு நபருக்கும் 20 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன.
காரில் இருந்தபடியே 10 நிமிடங்களில் ரத்த மாதிரியை கொடுத்துவிட்டு திரும்பி விடலாம். ரத்த மாதிரி கொடுத்து 24 முதல் 36 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகளை இமெயில் முகவரிக்கு தனியார் ஆய்வகம் அனுப்பிவிடுகிறது. இந்த சோதனையை பொது போக்குவரத்து வாகனத்திலோ, இரு சக்கர வாகனத்திலோ செல்லக் கூடாது. மத்திய அரசு நிர்ணயித்த 4,500 ரூபாய் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவே இந்த நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தனியார் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News