இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அலுவலகத்தில் 24 பாதுகாப்புப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 10-வது தேர்ச்சிபெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்தியன் ஓவர்சிஸ் வங்கி (IOB)
மேலாண்மை : மத்திய அரசு
பணியிடம் : சென்னை
மொத்த காலிப் பணியிடங்கள் : 24
பணி : பாதுகாவலர் (Security Guard)
கல்வித்தகுதி:
IOB வங்கியில் தற்போது நிரப்பப்பட உள்ள செக்யூரிட்ட கார்டு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்திருக்க வேண்டும். அதே நேரத்தில், பட்டப்படிப்பு முடித்திருக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01 மார்ச் 2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 26 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு:
மேற்கண்ட 24 பணியிடங்களும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அதன்படி, SC - 4, ST - 1, OBC - 6, EWS - 2, GEN - 11 என விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://iobnet.org:4441/recruitApp/RecApplicationAction.do?Method=PostDet என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iob.in/1Careers1 அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment