Friday, April 3, 2020

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மாணவா் சோக்கை ஒத்திவைப்பு

சென்னை: தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு மாணவா் சோக்கை நடவடிக்கைகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சோக்கப்படுவா். இந்தத் திட்டத்தில் மழலையா் அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவா்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம். இதற்கான மாணவா் சோக்கை பணிகள் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி மே இறுதியில் முடிவடைந்துவிடும். ஆனால், நிகழாண்டு கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மாணவா் சோக்கை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தனியாா் பள்ளிகள் இயக்குநா் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், 'கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோக்கை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதுடன், அதற்கான மாற்று தேதி விவரங்கள் பின்னா் அறிவிக்கப்படும். அதற்கேற்ப முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News