Friday, April 3, 2020

26 மாவட்டங்களில் கொரோனா தொற்று ஆய்வு - சுகாதாரத்துறை

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் சுமார் 13 லட்சத்து 67 ஆயிரம் மக்களிடம் கொரோனா தொற்று ஆய்வு செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக, நோய் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்குடன் தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்த வருகிறது.
அதன்படி ராணிப்பேட்டை, தஞ்சாவூர், வேலூர், கோவை, விருதுநகர், செங்கல்பட்டு, மதுரை, ஈரோடு, சேலம், நெல்லை, சென்னை, திருப்பூர், கரூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, நாமக்கல்,, திண்டுக்கல், திருப்பத்தூர், திருவாரூர், கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடி, திருவள்ளூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 26 மாவட்டங்களில் 4,585 களப்பணிளர்கள் வாயிலாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணிகளில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 201 வீடுகளில், சுமார் 13 லட்சத்து 67 ஆயிரத்து 534 நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டதாக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News