Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, April 6, 2020

எம்.பி.க்களின் ஓராண்டு ஊதியத்தில் 30% பிடித்தம்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்


கரோனா தொற்று காரணமாக தமிழகம், மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், நிதிச் சிக்கன நடவடிக்கையாக, பிரதமர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓராண்டுக்கான ஊதியத்தில் 30% தொகை பிடித்தம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், ஆளுநர்களும் தாமாக முன்வந்து ஊதிய பிடித்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் ஊதியம் கரோன தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்.
ஏப்ரல் 1ம் தேதி 2020ல் இருந்து இந்த ஊதியம் பிடித்தம் நடைமுறைக்கு வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எம்.பி.களுக்கான தொகுதி நிதி ஒதுக்கப்படாது என்றும் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்தார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News