Wednesday, April 15, 2020

பான் - ஆதார் இணைப்பிற்கு ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு

பான் அட்டை வைத்துள்ள நீங்கள் அதை ஆதார் எண்ணுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்க தவறினால் நீங்கள் செயல்படாத பான் அட்டையை பயன்படுத்தியதற்காக வருமான வரித்துறைக்கு ரூபாய்...
நிரந்தர கணக்கு எண் -பான் (Permanent Account Number – PAN) மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடுவை அரசு மார்ச் 31, 2020 என நிர்ணயித்து இருந்தது. பான் அட்டை வைத்துள்ள நீங்கள் அதை ஆதார் எண்ணுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்க தவறினால் நீங்கள் செயல்படாத பான் அட்டையை பயன்படுத்தியதற்காக வருமான வரித்துறைக்கு ரூபாய் 10,000/- வரை அபராதம் கட்ட நேரிடும்.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் அட்டை செயல்படாததாக அறிவிக்கப்படும் என முன்பு வருமான வரித்துறை அறிவித்திருந்தது. ஆதாரோடு இணைக்காத பான் அட்டைதாரர்கள் வருமான வரி சட்டத்தின் படி பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சமீபத்திய அறிவிப்பில் வருமான வரித்துறை தெளிவாக கூறியுள்ளது.
உங்கள் பான் அட்டை செயல்படாது போனால் என்ன ஆகும் ?
உங்கள் பான் எண் செயல்படாது போனால், சட்டப்படி தேவையான பான் எண்ணை நீங்கள் கொடுக்க வில்லை என கருதப்படும். மேலும் வருமான வரி சட்டம் பிரிவு 272B ன் கீழ் உங்களுக்கு ரூபாய் 10,000/- வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இருப்பினும் வரி சம்பந்தமில்லாத நோக்கங்களுக்காக, அடையாள ஆவணமாக வங்கி கணக்கு துவங்க, ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க போன்ற தேவைகளுக்கு நீங்கள் உங்கள் பான் அட்டையை பயன்படுத்தினால் அதற்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது.
ஆனால் நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் ரூபாய் 50,000/- க்கு மேல் செலுத்தவோ அல்லது எடுக்கவோ செய்தால் வங்கி உங்கள் பான் எண்ணை கேட்கும். அப்போது சிக்கல் வரும். செயல்படாத பான் அட்டையை வைத்திருப்பவர்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும் அவர்கள் புதிய பான் அட்டை வாங்க மீண்டும் புதிதாக விண்ணப்பம் செய்ய வேண்டிவரும்.
உங்கள் பான் அட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு விட்டதா என்பதை எவ்வாறு சரிப்பார்பது ?
பின்வரும் எளிய முறையை பின்பற்றி இணைப்பின் நிலையை அறிந்துக் கொள்ளலாம்
www.incometaxindiaefiling.gov.in/aadhaarstatus என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள்.
பான் மற்றும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்யுங்கள்.
‘View Link Aadhaar Status’ என்பதை சொடுக்கவும்.
இணைப்பின் நிலை அடுத்த திரையில் காண்பிக்கப்படும்.
இந்நிலையில், கோவிட் -19ன் பொருளாதார தாக்கத்தை சமாளிப்பதற்கான அறிவிப்புகளை, இன்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
அதன்படி, 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய 2020 ஜூன் 30 வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. தாமதமாக செலுத்தப்படும் வருமான வரிக்கான வட்டி 12 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ஆதார்-பான் இணைப்புக்கான கெடு மார்ச் 31 வரையில் இருந்தது, அது ஜூன் 30ம் தேதிக்கு நீட்டிக்கப்படுகிறது.
TDS தாமதமாக வைப்பு வைக்கப்பட்டால் 9% வட்டி மட்டும் வசூலிக்கப்படும். ஜூன் 30, 2020 வரையில் இந்த சலுகை. மற்றபடி இதில் கால நீட்டிப்பு கிடையாது.
‘Vivad Se Vishwas’ திட்டம் ஜூன் 30, 2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வட்டி இதற்கு கிடையாது.
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத ஜி.எஸ்.டி வரி செலுத்துதல் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுகிறது. ரூ .5 கோடிக்கு குறைவான வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு, வட்டி, அபராதம் மற்றும் தாமத கட்டணம் வசூலிக்கப்படாது. வாரியக் கூட்டங்களை நடத்துவதற்கான 60 நாட்கள் காலக்கெடு தளர்த்தப்படுகிறது. 60 நாட்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தாவிட்டால் அது குற்றமாக பார்க்கப்படாது. வாரிய கூட்டங்களுக்கான காலத் தளர்வு அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு நீடிக்கும்.
புதிதாக இணைக்கப்பட்ட நிறுவனங்கள் வணிகத்தைத் தொடங்குவதற்கான அறிவிப்பை தாக்கல் செய்ய 6 மாதங்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
சிறு மற்றும் குறு தொழில்களுக்கான திவால் நிலை மற்றும் திவால் குறியீடு (ஐபிசி) இயல்புநிலை வரம்பை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ .1 கோடியாக உயர்த்துகிறோம். எனவே நிறுவனங்கள் நொடித்துப்போவதைத் தடுக்கலாம்.
மீன் வளத்துறை ஆவண சரிபார்ப்பு, 7 நாட்களுக்கு பதில் 3 நாட்களில் முடிவடையும்” என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News