Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 7, 2020

38 வது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.!


நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை அமைந்துள்ளது. இதனால் நாகையில் இருந்து மயிலாடுதுறையை பிரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது வந்தது. இதனையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க அரசு பரீசீலனை செய்து வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமியும் தெரிவித்தார். அந்தப் பரிசீலனை கடந்த மார்ச் 24ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மயிலாடுதுறையை தமிழ்நாட்டின் 38 வது மாவட்டமாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரித்து தனி மாவட்டமாக அறிவித்ததற்கான அரசாணை தற்போது வெளியிட்டது. நாகப்பட்டினத்திலிருந்து பிரிக்கப்படும் மயிலாடுதுறை 38 ஆவது மாவட்டமாக தமிழகத்தில் உதயமாகிறது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையரே கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மாவட்டத்திற்கான ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இனிமேல்தான் உருவாக்கப்படவேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்திருந்த தஞ்சை மாவட்டம் தற்போது தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை என 4 மாவட்டங்களாகப் பிரிந்திருப்பது அந்தந்தப் பகுதியில் வாழ்கிற மக்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவதுடன், புதிய வசதிகளை உருவாக்கி அவர்களின் அலைச்சலையும் குறைக்கும் என நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News