Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 25, 2020

லாக்டவுன் நீடித்தால் மே இறுதியில் 4 கோடி இந்தியர்கள் கையில் மொபைல் போனே இருக்காதாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
டெல்லி: கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டிருக்கும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டால் மே மாதம் இறுதியில் 4 கோடி இந்தியர்களின் கையில் செல்போன் இல்லாத நிலைமை உருவாகும் என்று இந்தியா செல்லுலார் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் அமைப்பு (India Cellular and Electronics Association ICEA) தெரிவித்துள்ளது.
மே 3ம் தேதிக்கு தயாராக திட்டம்... திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம்?
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது 5-வது வாரமாக லாக்டவுன் நீடித்து வருகிறது. இந்நிலையில் லாக்டவுன் தளர்வாக தொலைத்தொடர்பு, இண்டர்நெட் சேவை, தகவல் தொழில்நுட்ப துறை ஆகியவை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தகவல் தொழில்நுட்ப சேவை, இணைய சேவைக்கான அடிப்படையான செல்போன் சேவை குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.
இது தொடர்பாக இந்தியா செல்லுலார் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதில், ஒவ்வொரு மாதமும் பொதுவாக 2.5 கோடி புதிய செல்போன்கள் விற்பனையாகி வந்தது. நமது நாட்டில் தற்போது 85 கோடி செல்போன்கள் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன.
இந்த எண்ணிக்கையில் 0.25% அளவுக்கு செல்போன்கள் பழுதடைந்திருக்கலாம் என கணக்கிட்டுப் பார்த்தாலே தற்போதைய நிலையில் 2.5 கோடி செல்போன்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. செல்போன்களுக்கு பொருத்தமான உதிரி பாகங்கள் கிடைக்காத நிலையில் இவை செயலற்று இருக்கின்றன.
கொரோனா: சிங்கப்பூரில் 12 ஆயிரத்தை தாண்டியது- இலங்கையில் 416; மலேசியா, பாகிஸ்தானிலும் உக்கிரம்!
லாக்டவுன் காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டால் சுமார் 4 கோடி இந்தியர்கள் கையில் செல்போனே இல்லாத நிலைமை உருவாகும். ஆன்லைன் மூலம் மொபைல் போன் விற்பனை என்பது சிக்கலான ஒன்று.
மளிகை பொருட்கள், மருந்து பொருட்கள் போலவே செல்போன் சேவையையும் அத்தியாவசியப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News