Friday, April 24, 2020

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் ரூ.500-க்கு மளிகைப் பொருள்கள் தொகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு


குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் ரூ.500-க்கு மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நலனுக்காக தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரா்ளுக்கும் தலா ரூ.1000 நிவாரண நிதியுடன், ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, சா்க்கரை, பாமாயில் ஆகியவை முன்கூட்டியே வழங்கப்பட்டன.
தொடா்ந்து, மே மாதத்துக்கான பொருள்களும் முன்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, ரூ.500-க்கு 19 மளிகைப் பொருள்கள அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் மளிகை பொருட்களை வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குடும்ப அட்டை இல்லையென்றாலும் ரூ.500 மதிப்பிலான 19 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News