Thursday, April 16, 2020

திண்டிவனத்தில் 7 நாட்கள் கடையடைப்பு அறிவிப்பு!


மனித சமூகம் தோன்றிய காலத்திலிருந்தே பல்வேறு போர்களை எதிர்கொண்டுள்ளது. ஆனால் இந்தப் போர் ஒரு கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் தொற்றுடன். உலகத்தை ஆட்டிப்படைக்கும் வல்லரசு நாடான அமெரிக்கா உட்பட பொருளாதார ரீதியாக உயர்ந்த நாடுகள் வரை இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறி வருகிறன. இந்தியாவிலும் இந்த வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய தமிழக அரசு, சமூக விலகலை ஏற்படுத்தும் விதமாக, அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் இயங்கும் நேரத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்தது. இந்நிலையில் விழுப்புரம் திண்டிவனத்தில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு கடையடைப்பு செய்யப்போவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News