Sunday, April 5, 2020

கொரோனா காலத்தில் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் (Apps)என்ன தெரியுமா?

கூட்டங்கள் தொடங்கி, பணியாளர்கள் அலுவலக வேலைகள் வரை தற்போது இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது.
கொரோனா காலத்தில் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்னென்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரவும், போக்குவரத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பணியாளர்களை வீட்டிலிருந்து ஒருங்கிணைந்து பணியைச் செய்யவும், வீட்டிலே உள்ளவர்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பேசிக்கொள்ளவும் தேர்வு செய்வது வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலிகளைத்தான். Priori என்ற ஆய்வு நிறுவனத்தின் சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவுகள்படி, வீடியோ கான்ஃபரன்ஸிங் பயன்பாட்டுக்காக, பல செயலிகள் இருந்தாலும், உலகம் முழுவதும் zoom, Skype, House party என்ற மூன்று செயலிகளை அதிகம் பயன்படுத்துவதாக கூறுகின்றன.
ஜனவரி மாதத்தில் 21 லட்சம் முறை வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலிகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில் 27 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. மார்ச் மாதம் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலிகளில் zoom செயலி முதலிடத்தில் உள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 269 லட்சம் பேர் இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்துள்ளனர். இரண்டாவதாக skype செயலியை 62 லட்சம் பேரும், அடுத்ததாக house party செயலியை 52 லட்சம் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாகப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் skype செயலி முதலிடத்தில் உள்ளது. இதை தினமும் 591 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். அடுத்ததாக zoom செயலியை 43 லட்சம் பேரும், house party செயலியைத் தினமும் 1 லட்சம் பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News