Wednesday, April 15, 2020

ஆரோக்யா சேது ஆப்.. கொரோனாவிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி..?


கொரோனா வைரஸ் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஆரோக்கியா சேது மொபைல் செயலியை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பிரதமர் மோடி குறிப்பிட்ட ஆரோக்கியா சேது செயலி என்பது என்ன? எப்படி செயல்படும் என்பதை பார்க்கலாம்.
கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ளும் வகையில் மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பாக ஆரோக்யா சேது (Aarogya Setu) என்ற செயலி வெளியிடப்பட்டுள்ளது. ஆரோக்யா சேது (Aarogya Setu) ஆப் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து உருவாக்கப்பட்டு உள்ளது. இது கொரோனாவில் இருந்து காக்க உதவும். இந்த ஆப் ஏஐ மூலம் செயல்பட கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளளது.

ஜிபிஎஸ் லொகேஷன், ப்ளூடூத், வைஃபை ஆகியவற்றின் மூலம் இது ஒருவரின் இருப்பிடத்தை வைத்து எச்சரிக்கும். நீங்கள் இருக்கும் இடம், உங்களுக்கு அருகே இருக்கும் நபர்கள் மூலம் உங்களுக்கு எந்த அளவிற்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்பதை உங்களை எச்சரிக்கும். அதேபோல் அரசுக்கும் உடனுக்குடன் இது கொரோனா குறித்த தகவல்களை தெரிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் கொரோனா குறித்த அறிகுறிகள், முக்கியமான அறிவிப்புகள், செய்திகள் கூட கிடைக்கும். இந்த ஆரோக்யா சேது ஆப் இந்தியாவில் மொத்தம் 11 மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளது. உங்களுக்கு கொரோனா ஏற்பட்டால் அல்லது கொரோனா அறிகுறி இருந்தால் இதில் தகவலை தெரிவிக்கலாம். அதன்மூலம் அருகே உள்ளவர்களை இந்த ஆப் எச்சரிக்கை செய்யும்.
ஆன்டிராய்டு மற்றும் ஆப்பிள் இயங்கு தளத்தில் இது இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News