எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 27-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா தடுப்புமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.
அதற்கு பதிலாக வருகிற 15-ந்தேதி முதல் தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை வருகிற 14-ந்தேதி வரை அமல்படுத்தி இருக்கிறது. ஊரடங்கு முடிந்த முதல் நாளில் தேர்வு தொடங்க உள்ளது.
இந்த நிலையில் தேர்வு திட்டமிட்டபடி அதே தேதியில் தொடங்குமா? கொரோனா வைரஸ் காரணமாக மீண்டும் தள்ளி வைக்கப்படுமா? என்பது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு மீண்டும் தள்ளிவைக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், ‘மத்திய அரசு வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்து இருக்கிறது. ஆகவே நாம் பொறுத்து இருந்து பார்ப்போம்’ என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment