Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 9, 2020

ஆளி விதையில் இருக்கும் மருத்துவ குணங்கள்


ஆளி விதையை உபயோகிப்பதன் மூலம் டைப்-2 நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம். பெண்களின் மெனோபாஸ் காலங்களில் திடீரென உடல் சூடாவது போலவும் குளிர்வது போலவும் அதிகம் வியர்ப்பது போலவும் ஏற்படும். ஹாட் பிளஸ்ஸ் உணர்வு, உடலில் 'ஈஸ்ட்ரோஜன்' என்னும் ஹார்மோனின் சுரப்பில் வித்தியாசம் ஏற்படுவதால் வருகிறது. ஆளி விதையில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹாட் பிளஸ்ஸ்’யை குறைக்கும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆளி விதையில் உள்ள கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து, கரையும் தன்மை அற்ற நார்ச்சத்து இரண்டுமே பல வகைகளில் நமக்கு நன்மை செய்யும். மலச்சிக்கலைத் தடுக்கும். இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் மிகுந்துள்ளதால் புராஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மலக்குழாய் புற்றுநோய் போன்றவை வராமல் பாதுகாக்கும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தினமும் ஆளி விதை உட்கொண்டால் மூட்டுவலியைக் குறைக்கும். சருமத்துக்கும் நமது தலைமுடிக்கும் மினுமினுப்பைத் தரும். ஆளி விதை உட்கொள்வதன் மூலம் தோலின் ஈரத்தன்மை பாதுகாக்கப்படுவதால், தோல் வறட்சி, கூந்தல் உதிர்வு போன்றவை தடுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment