Wednesday, April 22, 2020

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ; அசத்தும் தொழில் நுட்ப கல்வித்துறை


சென்னை : ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்துவதில் தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் முன்னோடியாக திகழ்கிறது.கொரோனா வைரஸ் ஊரடங்கால் வீட்டில் உள்ள மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளலாம் என பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். 'ஸூம் செயலி' இந்த உத்தரவுப்படி பள்ளி கல்வி துறையில் சில ஆசிரியர்கள் 'ஸூம் செயலி' வழியாக பாடங்கள் நடத்த முயற்சித்தனர். ஆனால் இந்த செயலியானது பயன்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பற்றது என மத்திய அரசு அறிவித்ததால் பல மாணவர்களும் பெற்றோரும் ஸூம் செயலியை பதிவிறக்கம் செய்யவில்லை. மேலும் பல கல்வி நிறுவனங்கள் எந்த தளத்தைபயன்படுத்துவது என தெரியாமல் ஆன்லைன் வழி பாடங்களை நடத்தவில்லை. இந்நிலையில் தமிழக அரசு நடத்தும் பாலிடக்னிக் மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு விடுமுறையிலும் வகுப்புகள் எடுக்கும் வகையில் தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.இந்த நிறுவனத்தின் சார்பில் பல்வேறு பாடங்களுக்கான பேராசிரியர்கள் வழியாக வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ பாடங்கள் பாட வாரியாகவும் ஒவ்வொரு தலைப்பு வாரியாகவும் 'யூ டியூப்' பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.யூ டியூப் அவற்றை மாணவர்கள் தாங்கள் நினைத்த நேரத்தில் பார்த்து படிக்கும் வகையில் வீடியோக்கள் இடம் பெற்றுள்ளன. இலவச செயலிகளை விட யூ டியூப் பாதுகாப்பானது என்பதால் மாணவர்கள் அந்த தளத்தை பயன்படுத்தி பாடங்களை படித்து வருகின்றனர். தொழில்நுட்ப கல்வி துறையின் பாடங்களை https://www.youtube.com/channel/UC0b7e8I xomywzllarL3M44g playlists என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News