Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 7, 2020

நன்மைகள் தரும் பாகற்காய் ஜூஸ்..!



பாகற்காயில் விட்டமின் A, B, C பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
பாகற்காயை ஜூஸ் செய்து மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. பாகற்காயை ஜூஸ் குடிப்பதால் ரத்தத்தில் மற்றும் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
பாகற்காய் ஜூஸ், கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் புற்றுநோய் அணுக்களின் வளர்ச்சியை தடுக்கச் செய்கிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில், ஒரு கப் பாகற்காய் ஜூஸ் உடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை ஜூஸை கலந்து குடித்து வந்தால், நமக்கு ஏற்படும் அழற்சி போன்ற தோல் தொடர்பான பிரச்னைகளை வராமல் தடுக்கிறது.
பாகற்காயில் இருக்கும் பீட்டா-கரோட்டின் மற்றும் விட்டமின்கள், நமது கண் தொடர்பான நோய்களுக்கு தீர்வாக உள்ளது.
பாகற்காயில் இருக்கும் சத்துக்கள் விஷத்தன்மையுள்ள அழுத்தத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
தினமும் காலையில் பாகற்காயை ஜூஸ் செய்து ஒரு டம்ளர் குடித்து வந்தால், நம்மை தாக்கும் பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News