Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுமக்கள் தரமான தங்க நகைகளை எவ்வாறு பார்த்து வாங்குவது என்பது குறித்து இந்தியதர நிர்ணய அமைப்பின் (பிஐஎஸ்) தென்மண்டல துணை தலைமை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
தரமான நகைகளை மக்கள் எவ்வாறு பார்த்து வாங்குவது என்பது குறித்து சென்னையில் இந்திய தர நிர்ணய அமைப்பின் (பிஐஎஸ்) தென்மண்டல துணை தலைமை இயக்குநர் பி.எம்.பந்துலு செய்தியாளர்களிடம் நேற்று கூறியதா வது
பொதுமக்கள் தரமற்ற தங்கம், வெள்ளி நகைகளை வாங்கி ஏமாறாமல் இருக்க ‘ஹால்மார்க்’ முத்திரை திட்டத்தை பிஐஎஸ் செயல்படுத்தி வருகிறது. இதற்காக, பிஐஎஸ் அங்கீகாரம் பெற்றஹால்மார்க் மையங்கள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. விற்பனையாளர்கள் தரும் நகைகள் இந்த மையங்கள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் தரம் பதிவு செய்யப்படுகிறது.
மக்கள் அதிகம் பயன்படுத் தும் 22 காரட் தங்கத்துக்கு 916 முத்திரை அளிக்கப்படுகிறது. எனவே, நகை வாங்கும்போது அதில், முக்கோண வடிவில் உள்ள பிஐஎஸ் முத்திரை, 22K916 முத்திரை, ஹார்மார்க் கிங் மையத்தின் முத்திரை, நகை விற்பனையாளரின் முத்திரை ஆகிய 4 முத்திரைகளும் இருப்பதை உறுதி செய்து பார்த்து வாங்க வேண்டும்.
இதில் ஒன்று குறைந்தாலும், அது தரமான நகை அல்ல.
இந்த முத்திரைகளை வாடிக்கையாளர்கள் பார்த்து தெரிந்துகொள்ள, விற்பனையாளர்கள் தங்கள் கடையில் பூதக்கண்ணாடியை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவு றுத்தப்பட்டுள்ளது.அது மட்டுமின்றி, வாங்கும் நகைகளுக்கு பில் பெறவேண்டிய அவசியம்.
பில் இருந்தால்தான், நகையின் தரத்தில் குறைபாடு இருக்கும்பட்சத்தில் புகார் தெரிவிப்பது எளிதாக இருக்கும்.தமிழகத்தில் மொத்தம் 1,940 தங்கம், வெள்ளி நகை விற்பனையாளர்கள் ஹால்மார்க் உரிமம் பெற்றுள்ளனர். உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் பட்டியலை www.bis.gov.in இணையதளத் தில் Hallmarking > Jewellers Certification Scheme >> List of Licensed Jewellers என்பதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
ஐஎஸ்ஐ, ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட பொருட்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந் தால் 044-22541442, 22541216 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு நுகர்வோர் புகார் அளிக்கலாம். sro@bis.org. in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
IMPORTANT LINKS
Sunday, April 26, 2020
தரமான நகைகளை எவ்வாறு பார்த்து வாங்குவது?
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment