Friday, April 24, 2020

ஆறு பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் யுஜிசி தகவல்

சென்னை: கல்லூரி படிப்பில் ஆறு பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
கல்லூரி பாடங்களில் உள்ள அம்சங்களை செயல்படுத்தும் வகையில் கற்றல் வெளிப்பாடு திட்டத்தில், புதிய பாடத்திட்டங்களை பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி. உருவாக்கி வருகிறது. இந்த வரிசையில், இயற்பியல், கணிதம், ஆங்கிலம், மானுடவியல், உளவியல், நூலக அறிவியல், தாவரவியல், புள்ளியியல், ஊடகவியல் போன்ற, 19 பாடங்களுக்கு, ஏற்கெனவே புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, சட்டம், தொல்லியல், சம்ஸ்கிருதம், பாதுகாப்பு படிப்பு, வேதியியல் மற்றும் விலங்கியல் ஆகிய படிப்புகளுக்கு, புதிய பாடத்திட்டத்தை, யு.ஜி.சி. அறிமுகம் செய்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News