Monday, April 13, 2020

டிஎன்பிஎஸ்சி தலைவராக கா.பாலச்சந்திரன் ஐஏஎஸ் நியமனம் - தமிழக அரசு


டிஎன்பிஎஸ்சி தலைவராக கா.பாலச்சந்திரன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் முதன்மை செயலாளராக இருந்தவர் பாலச்சந்திரன்.
இதற்கு முன் டிஎன்பிஎஸ்சி தலைவராக அருள்மொழி ஐ.ஏ.எஸ் இருந்தார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்பொறுப்பை ஏற்றார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் அவர் டிஎன்பிஎஸ்சி தலைவராக பணியாற்றி உள்ளார்.

சென்னையில் பதுங்கி இருந்த எத்தியோப்பியா நாட்டினர்... கைது செய்த போலீஸ்
இந்த சூழ்நிலையில் அருள்மொழி பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து தற்போது டிஎன்பிஎஸ்சி தலைவராக கா.பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். டின்பிஎஸ்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், தலைவராக பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டிருப்பது அவருக்கு சவால் மிகுந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் ஒருவர் அதிகப்பட்சமாக 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பணியாற்றலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News