Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னை: பிளாஸ்மா தெரபி, ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்று பெரிய மருந்துகள் எதுவும் இல்லாமலே கொரோனாவை தமிழகம் வேகமாக குணப்படுத்த தொடங்கி உள்ளது.
Total Lockdown will be implement in Chennai, Kovai and Madurai
தமிழகத்தில் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 90 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் அடைந்துள்ளனர். தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 752ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 44% பேர் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்தியாவில் கொரோனா நோயாளிகளை அதிகம் குணப்படுத்தியதில் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது.
தென் கொரியா
தென் கொரியா முதலிடம்
கொரோனாவை வேகமாக குணப்படுத்துவதில் உலகில் தென் கொரியாதான் முதல் இடத்தில் இருக்கிறது. இதற்கு காரணம், தென் கொரியாவில் பிளாஸ்மா தெரபி பயன்படுத்தப்பட்டது. அதாவது பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனாவில் இருந்து குணமான நபர்களின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாவை எடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடலில் செலுத்துவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும் .
கொரோனா நோயாளிகள்
தமிழகத்தில் கொரோனா நோயாளிகள்
இதன் மூலம் கொரோனா நோயாளிகள் மிக வேகமாக குணப்படுத்தப்படுவார்கள். இதுதான் தென்கொரியாவில் கொரோனா குணமடைய காரணம். தமிழகம் தற்போது தென்கொரியாவை விட மிக வேகமாக நோயாளிகளை குணப்படுத்துகிறது. கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் வேகத்தில், தமிழகத்தை ஒரு தனி நாடாக பார்த்தால், அதில் தமிழகம்தான் முதல் இடத்தில் இருக்கும்.
பிளாஸ்மா தெரபி சிகிச்சை
பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை
ஆனால் தமிழகத்தில் இப்படி பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை பயன்படுத்தப்படுவது இல்லை. சிறப்பான சிகிச்சை முறை எதுவும் இல்லாமலே தமிழகம் நோயாளிகளை குணப்படுத்துகிறது. உதாரணமாக அமெரிக்கா உட்பட பல நாடுகளில் தீவிரமாக பாதிக்கப்பட்டு இருக்கும் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்துகிறார்கள். இங்கிலாந்திலும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்துகிறார்கள்.
ஹைட்ராக்சிகுளோரோகுயின்
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து
ஆனால் அங்கெல்லாம் இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்பது மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மருந்து ஆகும். ஆனால் தமிழகம் இந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கூட நோயாளிகளுக்கு பயன்படுத்துவது இல்லை. மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்தும் கூட ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை தமிழக சுகாதாரத்துறை பயன்படுத்துவது இல்லை.
சிறப்பான சிகிச்சை
தமிழகத்தில் சிறப்பான சிகிச்சை
இப்படி கொரோனாவிற்கு எதிரான சிறப்பான சிகிச்சை எதையும் தமிழகம் கடைபிடிக்கவில்லை. ஆனாலும் தமிழகம்தான் அதிகமான நோயாளிகளை இந்தியாவில் குணப்படுத்தி உள்ளது. தமிழகம் எப்படி இந்த சாதனையை செய்தது என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. இதற்கான விடை மிக எளிதானது, அடிப்படையானது. ஆம் தமிழக மருத்துவர்கள் மிக அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தி கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி வருகிறார்கள்.
எதிர்ப்பு சக்தி
கொரோனா எதிர்ப்பு சக்தி
கொரோனா என்பது நமது எதிர்ப்பு சக்தியை காலி செய்து அதன்பின் நம்மை தாக்கி அதன் மூலம் நம்மை கொல்ல கூடிய வைரஸ் ஆகும். இதனால் உடலில் எதிர்ப்பு சக்தியை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தி, அதன் விளைவுகளை கட்டுப்படுத்தி, மொத்தமாக கொரோனாவை குணப்படுத்த முடியும். கொரோனா ஏற்பட்டால் அதன் பக்க விளைவாக காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படும்.
மூச்சு விடுவதில் சிக்கல்
காய்ச்சல் மருந்து
இதனால் மூச்சு விடுவதில் சிக்கலுக்கு எதிரான மருந்து, காய்ச்சல் மருந்து, ஜலதோஷம் மருந்து மற்றும் வயிற்றுப்போக்கு மருந்துகளை மட்டும் தொடர்ந்து கொடுத்து வந்தால் போதும். வைரஸ் தானாக குணமாகும் வரை இதை செய்ய வேண்டும். இதன் மூலம் கொரோனா பாதிப்பை முடிந்த அளவு கட்டுப்படுத்த முடியும்.
தமிழக மருத்துவர்கள் இப்படித்தான் கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து மருந்துகளை கொடுத்து எதிர்ப்பு சக்தியை அளித்து வருகிறார்கள்.
மருந்துகள் என்ன
என்ன மருத்துவம் தருகிறார்கள்
எதிர்ப்பு சக்தி குறையாமல் தொடர்ந்து மருந்துகள் மூலம் அதை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இது கொரோனா பாதிப்பை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தும். அதேபோல் இன்னொரு பக்கம் கொரோனா நோயாளிகளுக்கு தமிழக அரசு மிகவும் சிறப்பான உணவுகளை வழங்கி உள்ளது. இதுவும் கூட கொரோனாவை குணமாக்குவதில் முக்கிய பங்கு வகித்து உள்ளது. முழுக்க முழுக்க எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை மட்டும் கொடுத்துள்ளனர்.
அதிகரிக்கும் உணவுகள்
அதிகரிக்கும் உணவு முறைகள்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் என்னவெல்லாம் இருக்கிறதோ அதை எல்லாம் கொடுத்து வருகிறார்கள்.
மூன்று வேளை உணவுக்கு பதில் 5 வேளையாக உணவை பிரித்து கொடுக்கிறார்கள். அதேபோல் கபசுர குடிநீர், எலுமிச்சை நீர், இஞ்சி நீர் என்று வரிசையாக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குடிநீர்களை அதிக அளவில் கொடுத்து எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வருகிறார்கள்.
சிகிச்சை முறை
தமிழகம் சிகிச்சை முறை
நோயாளிகளை தீவிரமாக கண்காணிப்பது, அவர்களின் எதிர்ப்பு சக்தியை கொஞ்சம் கூட குறையாமல் பார்த்துக் கொள்வது, அவர்களுக்கு வேறு ஏதாவது குறைபாடு இருந்தால் அதற்கும் மருந்து கொடுத்து சரி செய்வது இதுதான் தமிழகம் கொரோனாவிற்கு எதிராக செய்யும் சிகிச்சை முறையாகும். இதுதான் இத்தனை வேகமாக தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் குணமடைய காரணம் என்று கூறுகிறார்கள்.
IMPORTANT LINKS
Saturday, April 25, 2020
Home
பொதுச் செய்திகள்
பிளாஸ்மா தெரபி இல்லை.. ஆனாலும் மாயம் செய்யும் தமிழ்நாடு.. கொரோனா நோயாளிகள் வேகமாக குணமாவது எப்படி?
பிளாஸ்மா தெரபி இல்லை.. ஆனாலும் மாயம் செய்யும் தமிழ்நாடு.. கொரோனா நோயாளிகள் வேகமாக குணமாவது எப்படி?
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment