Tuesday, April 14, 2020

உடலை சுத்தப்படுத்தும் முத்திரை செய்வது எப்படி?


விரிப்பனை தரையில் விரித்து கிழக்கு முகமாக பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். பின் கட்டை விரலால் மோதிர விரலின் மூன்றாவது அங்குலாஸ்தியை: அதாவது மூன்றாவது கீழ்ப்பகுதியை மெதுவாத் தொட வேண்டும். அதில் சிறிதளவு அழுத்தம் கொடுக்கவும். ஒரே சமயத்தில் இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும்.
முதலில் 5 நிமிடங்கள் செய்லாம். ஒரு நாளில் காலை, மதியம், மாலை, மூன்று வேளையும் 15 நிமிடங்கள் செய்தால் மிகுந்த பலன் கிடைக்கும். விரிப்பில் அமர்ந்தும் செய்யலாம். நாற்காலியில் உட்கார்ந்தும் (நிமிர்ந்து அமரலும்) செய்யலாம். நீங்கள் நின்ற நிலையிலும் இதனைச் செய்யலாம். கிடைக்கின்ற நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நம் உடலில் உள்ள கழிவுகள் சரியாக வெளியேறி விடும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News