கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கரோனா பரவல் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அனைத்துத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக பொதுத்தேர்வு தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என பல்வேறு மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், ஜே.இ.இ., யுஜிசி நெட் தேர்வு உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன என்றும் இந்தத் தேர்வுகளுக்கான மறுதேதி ஊரடங்கு முடிவடைந்த பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment