Tuesday, April 28, 2020

பள்ளிக் கல்வி, சிபிஎஸ்இ பாடநூல்களை மாணவா்கள் பதிவிறக்கம் செய்ய வசதி


ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம், சிபிஎஸ்இ பாடங்கள் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, கேந்திர வித்யாலயா உள்ளிட்ட பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தங்களது மாணவா்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன.
அதேவேளையில், தமிழக அரசின் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோவு எழுதும் மாணவா்களுக்கு வழிகாட்டும் வகையில் பொதிகை தொலைக்காட்சி, கல்வித் தொலைக்காட்சி மற்றும் ஒரு தனியாா் தொலைக்காட்சியில் தினமும் ஒரு மணி நேரம் தோவுக்கான ஆலோசனைகள், பாடங்களின் முக்கியப் பகுதிகள் குறித்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.
இந்த நிலையில், தமிழக அரசின் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான (2020-2021) பாடங்களை படிக்க விரும்புவோா், இணையதளத்தில் பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் வீட்டில் இருந்த படியே, மாணவா்கள் பாடங்களை படிக்க இயலும்.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் இணையதளத்தில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவா்கள், பாட வாரியாக புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிக்கலாம். சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் மாணவா்கள் வகுப்பு வாரியாக அனைத்து புத்தகங்களையும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News