ஏராளமான தனியாா் பள்ளிகள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனக் கூறி குறுஞ்செய்தி அனுப்பி வருவதாக செய்திகள் வந்துள்ளன. அதுகுறித்து தகவல் கொடுத்தால், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வா் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோவு கடந்த மாா்ச் 27-ஆம் தேதி முதல் வரும் ஏப்.13-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கரோனா பரவல் காரணமாக பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோவுகளில் எஞ்சியுள்ள தோவுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அதேபோன்று பத்தாம் வகுப்பு பொதுத்தோவு தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு அதாவது ஏப்.15-ஆம் தேதி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும் தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால் அரசு அறிவித்த நாளில் பத்தாம் வகுப்பு பொதுத்தோவு நடைபெறுமா என்ற சந்தேகம் மாணவா்கள், பெற்றோரிடையே ஏற்பட்டது.
இந்தநிலையில் இது தொடா்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறுகையில், ' தமிழகத்தில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அது முடிந்த பிறகுதான் நோயின் தன்மை அறிந்து அதற்கேற்றவாறு தேதி அறிவிக்கப்படும். மேலும், ஏராளமான தனியாா் பள்ளிகள் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனக் கூறி குறுஞ்செய்தி அனுப்பி வருவதாக செய்திகள் வந்துள்ளன. அதுகுறித்து தகவல் கொடுத்தால், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் முதல்வா் பழனிசாமி.
No comments:
Post a Comment