Saturday, April 4, 2020

நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறிகள்


தொடர்ந்து இருக்கும் இருமல், படி ஏறும்பொழுது மூச்சு வாங்குதல், தடித்த கரகரப்பான குரல் போன்றவை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். ஒரு காலில் மட்டும் வீக்கம், வலி என்று இருக்கின்றதா? உங்கள் காலில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். இந்த அடைப்பு சிறிது உடைத்து அந்த துகள் ரத்த ஓட்டத்தின் மூலமாக நுரையீரல் அடைந்து அங்குள்ள ரத்த குழாயினை அடைத்து கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தலாம். மூச்சு விடுவதில் கடினம், நெஞ்சு வலி போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். மேலும் நடையினைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
கை வீசி ஆனந்தமாய் நடங்கள். பச்சை நிற செடி கொடி, புல் தரை சூழல், மனமகிழ்ச்சி தரும்.
ஏதோ சிந்தனை செய்தபடி கவலைப்பட்டுக் கொண்டபடி நடைபயிற்சி செய்யாதீர்கள். மூச்சின் மீது கவனம் வைத்தபடி நடக்கலாம். ஆனால் போக்குவரத்து மிகுந்த நேரத்தில் இவ்வாறு செய்யக்கூடாது. செல்போனை வீட்டில் விட்டு செல்லுங்கள். போனில் பேசியபடியே நடப்பதற்கு நடக்காமலே இருக்கலாம். நடப்பது உங்களுக்கு இனிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தினை குறைக்கும் என்பதனை அறியுங்கள்.
ஒவ்வொரு நேர உணவிற்குப் பின்பும் சிறிது நேரம் நடங்கள். அதிக நேரம் அமர்ந்தபடி இருக்காதீர்கள். கண் விழித்தவுடன் படுக்கையில் இருந்து எகிரி குதித்து ஒட்டப்பந்தயம் போல் வேலைகளை ஆரம்பிக்காதீர்கள். நம் மரபணுக்களும் நாம் வளர்ந்த முறையும் நாம் மன அமைதியாக வாழ்க்கையினை ஏற்கும் குறைவினை நிர்ணயிக்கின்றது. எனவே நான் நன்கு இருக்கிறேன் என்ற மன நிலையினை வளர்த்து கொள்ளுங்கள். எப்பொழுதும் சுய உணர்வோடு இருங்கள்.
திடீரென உடலில் சிகப்பு திட்டுகள் அரிப்புடன் இருந்தால் (அலர்ஜி அல்லாது) நீங்கள் அதிகம் ஸ்ட்ரெஸ் ஆகியிருப்பதன் வெளிப்பாடாகவும் இருக்கலாம் என்பதனை உணருங்கள். குளிர்ந்த ஈரமான டவல் கொண்டு சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் வைக்கலாம். யோகா, தியானம் போல் மனதினை அமைதி படுத்துவது எதுவும் இல்லை எனலாம். எனவே யோகா, தியானம் பழகுங்கள். மணமுள்ள பூக்கள், வாசனை இவை ஸ்டிரெஸ்சினை போக்கும். இதனாலேயே நம் முன்னோர் சந்தனம், பன்னீர், ஊதுவத்தி, சாம்பிரானி, மண முள்ள பூக்கள் இவைகளை இறைவனுக்கு பூஜை என்ற முறையில் பயன்படுத்தி வந்தனர்.
வாய் விட்டு கத்துவது ஸ்டிரெஸ் நீக்கும் என்பது இன்றைய ஆய்வின் கூற்று. இதைத்தான் மந்திரங்கள், ஓம் என்ற உச்சாடனம் மூலம் அன்றிலிருந்தே செய்து வந்துள்ளனர். யாரும் பார்க்காமல் அறையினுள் இசைக்கு நடனமிடுங்கள். இதுதான் பண்டைய பஜனை முறைகள். பாடல்கள் மன அமைதி தருகின்றன. இதனால் மன நிறைவு பெற்று குறைவாக சாப்பிடுவீர்கள். வாத்திய வாசிப்பு மூளையினை கூர்மையாக்கும். நல்ல பாட்டு ரத்த நாளங்களை இளக செய்யும். கூட்டுப் பாடல், பிரார்த்தனை மன மகிழ்வு தரும். இசை உங்களது வேலையினை துரிதமாக செய்ய வைக்கும். இசை சிந்தனைத் திறனை கூட்டும். சக்தி கூடும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News