மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியாக உள்ள தலைமைக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான துறை தேர்வு அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் இத்தேர்வுகள் அறிவித்த படி நடைபெறுமா என விண்ணப்பதாரர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியாக உள்ள தலைமைக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான துறை தேர்வு அறிவிக்கப்பட்டு இத்தேர்வு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மொத்தம் 1412 காலிப் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தது 4 ஆண்டுகள் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இந்நிலையில், நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் காரணமாக அரசுத் துறைத் தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டு வரும் நிலையில், சி.ஆர்.பி.எப் தேர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், விண்ணப்பதாரர்கள் தலைமை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா, தேர்வு நுழைவுச் சீட்டு எப்போது வெளியாகும் என்ற குழப்பத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment