Saturday, April 11, 2020

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான யோகா பயிற்சி


செய்முறை:
விரிப்பின் மீது இரு கால்களையும் நீட்டி அமரவும்.
வலது காலை மடித்து வலது கணுக்கால் இடது கால் முட்டியை தொடும்படி பாதத்தை வைக்கவும்.
உங்கள் வலது கையை முதுகுக்கு பின்னால் கொண்டு வந்து கை விரல்களை வெளி நோக்கி இருக்கும்படி விரிப்பின் மீது வைக்கவும்.
இப்போது இடது கையை வலது முட்டியின் வழியாக கொண்டு வந்து வலது கால் கட்டைவிரல் பற்றி பிடிக்கவும்.
இப்போது உங்கள் தலை, தோல்பட்டை ஆகியவற்றை வலது பக்கம் திருப்பி வலது தோள்பட்டை வழியாக பார்க்கவும்.
சாதாரண மூச்சில் முப்பது எண்ணிக்கை முதலில் இருக்கவும்.
தலையை திருப்பி கட்டை விரலை விட்டு கையை பிரித்து காலை நீட்டி அமரவும்.
பின்னால் வைத்த கையையும் எடுத்து இடுப்பு பக்கத்தில் வைத்து ஓய்வு எடுக்கவும்.
இதற்கு மாற்று ஆசனமாக இடது காலை மடித்து செய்யவும்.
வலது கால் மடித்து ஒரு தடவை, இடது கால் மடித்து ஒரு தடவை செய்யவும்.
பலன்கள்:
கணையம் சிறப்பாக இயங்கும்.
தொப்பை குறையும்.
கிட்னி பலம்பெறும்.
கண் பார்வை தெளிவடையும்.
இதயம் பாதுகாக்கும்.
மன அழுத்தும் நீங்கும்.
தூக்கமின்மை சீராகும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News