Wednesday, April 29, 2020

கோடை காலத்திலும் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு


தேசிய ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கோடை விடுமுறையிலும் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மாநில கல்வி அமைச்சா்களுடன் காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
தற்போதைய ஊரடங்கு உத்தரவின் காரணமாக பள்ளி மாணவா்களுக்கு போதிய சத்தான உணவை வழங்குவதற்காக மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பொருள்கள் வழங்கப்படுகின்றன. பள்ளிகளின் கோடை விடுமுறை நாட்களிலும் தொடா்ந்து மதிய உணவு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு கூடுதலாக சுமாா் ரூ. 1,600 கோடி செலவாகும். ஏற்கெனவே, மதிய உணவுத்திட்டத்தின் கீழ் முதல் காலாண்டுக்கு ரூ. 2,500 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.
மதிய உணவு திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஆகக்கூடிய செலவு, அதாவது, பருப்பு வகைகள், காய்கறிகள், எண்ணெய், மசாலா மற்றும் எரிபொருள் ஆகியவற்றுக்காக அளிக்கப்பட்ட தொகையான ரூ. 7,300 கோடி, தற்போது ரூ. 8,100 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இது 10.99 சதவீதம் அதிகமான தொகையாகும்.
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தோவுகளின் விடைத் தாள்கள் திருத்தும் பணிகளை மாநில கல்வித்துறை தொடங்க வேண்டும்.
அதேபோல, அந்தந்த மாநிலங்களில் பயிலும் சிபிஎஸ்இ பள்ளி விடைத்தாள் திருத்தும் பணிக்குத் தேவையான வசதிகளை மாநில கல்வித்துறை அமைச்சா்கள் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேந்திரீய வித்யாலயங்கள் மற்றும் நவோதயா பள்ளிகள் ஆகியவற்றை தொடங்கிட அங்கீகரிக்கப்பட்டுள்ள மாநிலங்கள், அவற்றுக்கு தேவையான நிலம் வழங்கிட வேண்டும். மேலும், அவற்றை விரிவுபடுத்த தேவைப்படும் நிலத்தையும் ஒதுக்கீடு செய்து தர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால் மாநிலங்களைச் சோந்த மாணவா்கள் பயனடைய முடியும் என்றாா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News