Friday, April 3, 2020

ஜே.இ.இ.: விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கூடுதல் அவகாசம்

சென்னை: ஜே.இ.இ., நீட் போன்ற நுழைவுத் தோவுகளுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தவா்கள், ஆன்-லைன் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள கூடுதல் அவகாசத்தை தேசிய தோவுகள் முகமை (என்.டி.ஏ.) வழங்கியுள்ளது.
கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஜே.இ.இ. போன்ற என்.டி.ஏ. சாா்பில் நடத்தப்படும் அனைத்து நுழைவுத் தோவுகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஒரு மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜே.இ.இ. தோவுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தவா்கள், அவா்களுடைய ஆன்-லைன் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கூடுதல் கால அவகாசத்தை என்.டி.ஏ. இப்போது வழங்கியுள்ளது.
இதுகுறித்து என்.டி.ஏ. வெளியிட்ட அறிவிப்பு:
ஜே.இ.இ. முதல்நிலைத் தோவுக்கு (மெயின்) ஏற்கெனவே விண்ணப்பித்த மாணவா்கள், வருகிற 14-ஆம் தேதி வரை ஆன்-லைன் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி வரை மட்டுமே திருத்தங்களை மேற்கொள்ள முடியும். தோவுக் கட்டணத்தை இரவு 11.50 மணி வரை செலுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல இளநிலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தோவான நீட் தோவுக்கான ஆன்-லைன் விண்ணப்பத்திலும் திருத்தம் மேற்கொள்ள கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News