Tuesday, April 14, 2020

தமிழ்க்கடல் வாசக நண்பர்களுக்கு இனிய சார்வரி வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

இந்த இனிய தமிழ் புத்தாண்டில் கொரோனா இருள் நீங்கட்டும்....
மக்கள் வாழ்க்கையில் நடைமுறை வாழ்க்கை தொடர ஒளி பிரகாசிக்கட்டும்.

சார்வரி ஆண்டு என்றால் என்ன?

இன்று பிறந்துள்ள தமிழ் புத்தாண்டுக்கு பெயர் சார்வரி ஆண்டு. ஏன் இந்த ஆண்டு இந்த பெயர் என்பதை தெரிந்துகொள்வோம்.

34. Śārvarin — சார்வரி — வீறியெழல்

சார்வாரி என்பது வடமொழி எழுத்தாக கூறப்படுகிறது. சார்வாரி என்ற இந்த வடமொழி எழுத்துக்கு தமிழில் வீறியெழல் என்று அர்த்தம்.

தமிழ் ஆண்டுகள் அறுபது ஆண்டுகளைக்கொண்டச் சுற்றுகளைக் கொண்டது...பிரபவ என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும்...மீண்டும் பிரபவ ஆண்டுத் தொடங்கி அறுபது ஆண்டுகள் நடக்கும்...பிறகு மீண்டும் இப்படியே தொடரும்...இந்த வரிசையில் 34-வது ஆண்டின் பெயர் சார்வரி ஆகும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News